News

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய சூப்பர் டேங்கர் ( 2 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது பெரிய அளவிலானது) ஹார்முஸ் நீரிணையை கடந்து ஈரானின் இமாம் கொமெய்னி துறைமுகத்தை அடைந்தது

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான இரண்டாவது சூப்பர் டேங்கர் கப்பல், கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வளைகுடா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இரண்டு மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, காலியாக இருந்த RHN என்ற அந்த மிகப் பெரிய கச்சா எண்ணெய் டேங்கர் (VLCC) நேற்று வளைகுடா பகுதிக்குள் நுழைந்ததாக LSEG மற்றும் Kpler ஆகிய கடல்சார் உளவுத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. 

அந்த கப்பல் எங்கு செல்கிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை.


நேற்று அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய சூப்பர் டேங்கர் ஒன்று, முற்றுகையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து ஈரானின் இமாம் கொமெய்னி துறைமுகத்தை நோக்கிச் சென்றதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.


முன்னதாக, திங்கட்கிழமை இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 10 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், எந்தக் கப்பலும் தனது முற்றுகையை முறியடிக்கவில்லை என்றும் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உரிமை கோரியிருந்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button