News
பாணின் விலை குறையவில்லையா?

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்கள் பாணின் விலையை 10 ரூபாயால் குறைக்கவில்லை என்றால், பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இது குறித்து முறையிடலாம் என யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாணின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



