மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இது போன்ற பாத்தாள உலகம் இருந்ததா? செயல்பட்டதா? மனிதர்களை நடுவீதியில் கொன்றார்களா? இல்லவே இல்லை

நான் இந்த நாட்டு மக்களிடம் கேட்கிறேன்.. நான் இந்த நாட்டு ஊடகவியலாளர்களிடம் கேட்கிறேன்.. மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இதுபோன்ற பாத்தாள உலகம் இருந்ததா? கோட்டாபய ராஜபக்ச காலத்தில் இது போன்ற பாதாள உலகம் செயல்பட்டதா? இல்லை என மஹிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மக்களின் மனசாட்சிக்கு தெரியும் அவர்களின் ஆட்சியில் இதுபோன்று ஒவ்வொரு இடங்களில் மனிதர்களை கொல்லவில்லை..
இன்னும் சொல்லப்போனால் ராஜபக்சேவின் காலத்தில் பாத்தாள குழு உறுப்பினர்கள் அவர்களின் பெயர்களை சொல்லவே பயப்பட்டார்கள். அதுதான் உண்மை.
அதனால் நாட்டில் சட்டம் நீதியை நிலைநாட்டுவது எப்படி என்பது தொடர்பான டியூஷன் எடுக்க வேண்டும் என்றால் இந்த அரசு மஹிந்த ராஜபக்சவிடம் போகவும். நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றால் வெட்கப்படாமல் கோட்டபாய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று அதனை கற்றுக் கொள்ளுங்கள்.
அங்கு போய் உங்கள் இயலாமையை ஒத்துக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவர்களிடம் அறிவுரை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை எவ்வாறு அரசியல் ரீதியில் பதிவாகியிருந்தாலும் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்று உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். இந்த நாட்டு மக்களுக்காக அவர்கள் எந்தவித கண்டிஷனும் இல்லாமல் செய்வார்கள்.
நான் இறுதியாக கூறுகிறேன் நாட்டின் அமைதியை, நீதியை நிலை நாட்ட இந்த அரசு தவறி உள்ளது இந்த நாட்டை ஆள்வது இப்போது உள்ள ஜனாதிபதியும் அரசாங்கமும் தான்.. மேலும் இப்போது இடம் பெறும் குற்றச் செயல்களை ராஜபக்சே அவர்களின் தலையில் கட்டுவதை நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

