News
படுக்கையறை கட்டில் மெத்தையில் கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களை மறைத்து வைத்திருந்த 27 வயது பெண் பொலிஸாரால் கைது.

காலி மாவட்டம் – ஹபராதுவ பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபராதுவ ஹருமல்கொட, வெல்லகேவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் காலி பொலிஸாருகுக் கிடைத்த தகவல் கிடைக்கபெற்றுள்ளது. இதனடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பெண்ணின் வீட்டைச் சோதனையிட்ட போது இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
உள்நாட்டுக் கைத்துப்பாக்கிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இரண்டு வாள்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (

