News
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் இன்று படுகொலை செய்யப்பட்டார்.
இவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கியிருந்த கட்டிடம் தாக்கப்பட்டதில் ஹனியா மற்றும் அவரது மெய்க்காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டனர், நேற்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹனியே தெஹ்ரானில் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.