News
பாகிஸ்தானில் இன்று தொழுகை நேரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10க்கும் மேற்பட்டோர் காயம்.

பாகிஸ்தானின் (வடமேல் பகுதியில் அமைந்துள்ள) கைபர் பக்துன்க்வாவிலுள்ள பள்ளி வாயலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமழான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

