News

VIDEO > உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கிக்கு தாறுமாறாக டோஸ் விட்டு விரட்டி விட்ட டொனால்ட் ட்ரம்ப் – வெள்ளையை மாளிகையில் கடும் வார்த்தை மோதல்களுடன் முடிந்த கலந்துரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.

அதனையடுத்து பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில்   Dr. அர்ஷாத் அவர்களின் பதிவு..

இரவு செலன்சிகியை கூப்பிட்டு வைத்து ஏசி  அனுப்பியிருக்கிறார் டராம்ப் தாத்தா.   ரெஸ்பெக்டெட் பிரசிடென்ட்,   ரெஸ்பக்டெட் ப்ரசிடன்ட் என்று சொல்லி சொல்லியே நம்மட மானத்தை வாங்கிறானே என்று கடுப்பான ட்ராம்ப் உறுக்கி ஏசி கொம்பி வைத்திருக்கிறார். பார்ப்பதற்கு சமுத்தித்தவின் பேட்டி போல இருந்தது இந்த டிப்ளமட்டிக் மீட்டிங்.

உண்மையில் செலன்சிகி தான் பாவம். மிகவும் வளமான நாட்டை இப்போது நட்ட நடுவில் தனியே விட்டிருக்கிறார். ஏகாதிபத்தியம் அதை இனி தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும். செலன்சிகியைம் கவனித்து கொள்ளும்.
ஓவல் மீட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்த புட்டின் இப்படி தான் ட்ராம்புக்கு மேஸேஜ் அனுப்பி இருப்பார்.  வீடியோ பார்க்க > https://www.facebook.com/share/v/165zKhqy4V/

மேலதிக விபரம்

“நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள்.போரில் நீங்கள் வெல்லவில்லை.

நீங்கள் இந்த நாட்டை  அவமதிக்கிறீர்கள். 350
பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர்
1 வாரத்தில் போர் முடிந்திருக்கும்..”

ட்ரம்புக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!

உக்ரைனில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட வருமாறு உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு உக்ரைன் அதிபருக்கும், அமெரிக்க அதிபர் #ட்ரம்புக்கும்  இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆக்ரோசமுற்ற டொனால்ட் ட்றம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுமாறு உக்ரைன் அதிபரை கேட்டுக்கொண்டார்.

இதனை  தொடர்ந்து உக்ரைன் அதிபர் அங்கிருந்து இடைநடுவில் வெளியேறி சென்றார்.

அவர் வெளியேறியதை தொடர்ந்து #ஜெலென்ஸ்கி பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டொனால்ட் ட்றம்ப், “அவர் சமாதானத்தை விரும்பும் ஒரு மனிதராக நடந்து கொள்ளவில்லை, முறையாக உடுக்க தெரியவில்லை, பேச தெரியவில்லை, அமெரிக்காவையும், அமெரிக்காவின் அந்தஸ்த்தையும் மதிக்க தவறி விட்டார், இனிமேல் அவராக திரும்பி வந்தபோதிலும், நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம், உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி விட்டோம்” என்றார்.

நன்றி kalmunaitoday

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button