News
பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு எம்மிடம் முறையான திட்டம் உள்ளது… சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆன பின்னர் அவை அமுல்படுத்தப்படும் ; ஹர்ஷ

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமுல்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைப்பதற்கான ஏதேனும் திட்டம் உள்ளதா என மக்கள் கோரியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதற்கான முறையான திட்டம் உள்ளது.
மக்களின் வாழ்க்கை சுமையினை குறைப்பதே, தமது கட்சியினரின் நோக்கமாகும்.
எமது பொருளாதார கொள்கைகள் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

