இன்று அதிகாலை முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் கவலைக்கிடம் #கொழும்பு – கண்டி வீதி

கொழும்பு – கண்டி வீதி வரக்காபொல, அம்பேபுஸ்ஸ பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் உயிருக்கு போராடும் நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கண்டி வீதியில் அம்பேபுஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (09) இரவு கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூவர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்து இருவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 47 வயதுடைய தெல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

