News
செவ்வந்தி, ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இசாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கியதிக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இன்று (10) உத்தரவிட்டார்.
கடுமையான குற்றம் தொடர்பான விசாரணையின் போது பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும், அவர்களைத் தடுத்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தாக்கல் செய்த புகாரை பரிசீலித்த பின்னர், சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

