கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் கவிழ்ந்ததில் சாரதியும் அதில் பயணித்த பெண்ணும் உயிரிழப்பு.

அலிகந்த பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் பலியாகி உள்ளனர்.
பக்கமுன பொலிஸ் பிரிவின் எலஹெர வீதியில் உள்ள அலிகந்த பகுதியில் நேற்று (10) இரவு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி, போக்குவரத்து சமிஞ்சை கம்பத்தில் மோதி, கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதியும் அதில் பயணித்த பெண் பயணியும் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொரு பெண் பக்கமுன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சாரதி கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், உயிரிழந்த பெண்ணும் காயமடைந்த பெண்ணும் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் பக்கமுன வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

