தொழிலதிபர் கொண்டுவந்த ஒன்பது மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை, தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைக் காண்பித்து விமான நிலையத்திற்கு வெளியே எடுத்து சென்ற சுங்க அதிகாரி கைது.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பொதிகளுடன் சுங்க அதிகாரி உட்பட இருவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
ஒன்பது மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிகரெட்டுகளை நாட்டிற்குக் கொண்டு வந்த தொழிலதிபரும் அவரது உதவியாளரும் நேற்று காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
சுங்க அதிகாரியொருவர் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைக் காண்பித்து விமான நிலையத்திற்குள் நுழைந்து, விமான நிலையத்திற்கு வெளியே சிகரெட்டுகளை எடுத்துச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

