News
1500 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1500 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பண்டாரஹேன தேவாலயத்திற்கு அருகில் வைத்து லஞ்சம் வாங்கும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அடிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு, முறைப்பாட்டாளரின் பொலிஸ் அனுமதி அறிக்கையை வழங்குவதற்கு இலஞ்சம் கேட்டதாக பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

