News
மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவனின் 3000 ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர், ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

கொஹுவல பகுதியில் மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.
கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் ஒருவனின் 3000 ரூபா பணம் கொள்ளையடிக்கப் படுவதை நேரில் பார்த்த ஒரு குழு, பணத்தை பறிக்க முயன்றவரை கற்களால் தாக்கி விரட்டியடித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அந்த நபர் நாலந்தர வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்ததை பார்த்த கொஹுவல பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரை களுபோவில மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

