103 வயது வரை தெளிவான சிந்தனையுடன், திடகாத்திரமாகவும், மார்க்கக் கடைமைகளை நிறைவேற்றியபடி வாழ்ந்த யஹலதென்ன அப்பாஸ் ஹாஜியார்.

(ஜே.எம்.ஹாபீஸ்)
100 வருடங்களுக்கு மேல் திடகாத்திரமாக உயிர் வாழ்ந்த, கண்டி மாவட்ட, யஹலதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அப்பாஸ் அவர்கள் தனது 103 வயதில் காலமானார் (13.3.2025)
அன்றாடம் தனது சுய வேலைகளை தாமே செய்து கொண்டும் வாழ்ந்த இவர் தமது சமய விடயங்களுக்கு முன் உரிமை கொடுத்து, அதனை முறையாகப் பின்பற்றி வாழ்ந்த ஒருவராகும்.
மரணிப்பதற்கு சில நாட்கள் வரை அதாவது முதல் எட்டு நோன்புகள் வரை இவர் நோற்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்..
குறிப்பிடத்தக்க பாரிய வியாதிகள் எதுவும் இன்றி தனது புதல்வியின் உதவியுடன் வாழ்ந்து வந்த இவர் இறுதிநேரத்தில் மட்டுமே பலவீனமடைந்து காணப்பட்டார். .
இவர் இப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு அமைதியான சுபாவம் கொண்ட வர்த்தகராகும்.
இவர் நான்கு புதல்விகளதும், நான்கு புதல்வர்களதும் தந்தையாவார், அவர்களில் சிலர் மரணித்துள்ளனர். சிலர் வாழ்ந்துகொண்டுள்ளனர். .
இவரது ஜனாஸா 13ம் திகதி இரவு 10 மணியளவில் யஹலதென்ன ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது குடும் அங்கத்தவர்கள் மற்றும் 100 வருட ஆயுளில் இவர் சந்பாதித்த உறவுகள் எனப் பெருமளவு மக்கள் இரவுநேரம் எனப் பாராது இவரது நல்லடக்கத்தில் கலந்துகொண்டதாக அவர் புதல்வர் .ஏ.எம். மர்சூக் மற்றும் மருமகன் ஏ.எல்.எம். ரமீஸ் ஆகியோர் குறிப்பிட்டனர்.

