ஐந்தாம் வகுப்பு மாணவன் மீது அதே வகுப்பு மாணவர்கள் தீ வைத்த சம்பவம் கம்பளை குருந்துவத்தை பிரதேசத்தில் பதிவு

பாடசாலையில் இருந்த தின்னர் போத்தலை திருடிய சக மாணவர்களை காட்டிக்கொடுத்தமைக்கு பழிவாங்குவதாக கூறி பாடசாலை வகுப்பறையில் மாணவர் ஒருவரை தீ வைத்து எரித்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூவரை கைது செய்துள்ளதாக கம்பளை குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பத்து மற்றும் பதினொரு வயதுடைய மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வகுப்பறையில் இருந்த தின்னரை பெயிண்ட் கொள்கலனில் வைத்து தீ வைத்து எரித்து மற்றுமொரு மாணவனின் உடலில் வீசியதில் மாணவனின் கால்களில் தீக்காயங்களுடன் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டி ஏற்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் உள்ள தின்னர் கேனை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கழிவறை பகுதிக்கு கொண்டு சென்று தீ வைத்து கொளுத்தியதாக இந்த கொடூர சம்பவத்தை எதிர்கொண்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாணவர் ஒருவர், பாடசாலையில் இருந்த தின்னரை ஒரு பாட்டிலில் நிரப்பி புத்தகப் பையில் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார். இதனை மற்றும் ஒரு மாணவர் பாடசாலை நிர்வாகத்திடம் காட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த செயலால் ஆத்திரமடைந்த மாணவனும் மேலும் இரு மாணவர்களும் ஒரு பெயிண்ட் பாத்திரத்தில் தின்னர் நிரப்பி தீ வைத்து எரித்து வகுப்பில் இருந்த மாணவன் மீது வீசியதாக போலீசார் கூறுகின்றனர்.

