News

ரணில் விக்ரமசிங்க அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ளவில்லையென அவரின் அலுவலக அறிக்கை மூலம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் மேற்கொள்ளவில்லையென ரணிலின் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாா் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023 ஆம் ஆண்டில், அரச நிதியை செலவு செய்து லண்டனுக்கு விஜயம் செய்ததாக வெளியாகும் கருத்த முற்றிலும் தவறானது.



2023 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க மூன்று முறை லண்டனுக்கு விஜயம் செய்தாா். மூன்றாவது சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதியன்று முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தாா்.



இரண்டாவதாக பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் (IDU)  2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்கான லண்டனுக்கு சென்றிருந்தாா்.



மூன்றாவதாக ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற  G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்தன் பின்னர், அவர் தனது நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனுக்கும் பயணித்திருந்தாா்.



மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்த நாட்களில் வல்வர்ஹெப்டில் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் நியூயோர்க்கிற்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தாா்.



இந்த பயணங்களின்போது ரணில் விக்கிரமசிங்க பல அரச தலைவர்களை சந்தித்திருந்ததுடன்,  மேலும்,  பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தாார் எனவும் ரணிலின் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button