News
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொ*ன்றுள்ள சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் பதிவு
அம்பாறை, இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொன்றுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.இதில் மொனராகலை கரடுகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்