News
இன்றைய தினம் பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு ! அண்மைய தாக்குதல்களில் 500 க்கு மேற்பட்டோர் பலி !!

காஸாவில் நள்ளிரவு முதல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் இராணுவம் மூன்று ராக்கெட்டுகளை இடைமறித்ததாகக் கூறியது, அதற்கு பதிலடியாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு டெல் அவிவ் மீது சுட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் காசாவில் இஸ்ரேல் தனது வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களில் 500 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

