News
ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க சஜித், பசில், நாமல் , தம்மிக்க நால்வரும் இணைந்து ரகசியமாக சதி செய்கின்றனர் ; பீ. ஹரிசன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாஸ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு பல நாட்களாக கூடி இந்த கலந்துரையாடலை நடத்தியதாகவும் அவர் கூறுகிறார். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, பொதுஜன பெரமுனவுக்கு எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என அவர் கூறுகிறார்.
சோதித்து பார்க்கும் நேரம் இல்லையென்றும், தப்பி தவறியேனும் அதிகாரம் மாறிவிட்டால், பெட்ரோல், உரத்தின் விலைகள் 5 ஆயிரம் ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.