News
“ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உள்ளது”

சர்வதேச சமூகத்தின் பெருகிவரும் எதிர்ப்பின் மத்தியில், ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் புதுப்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தனது ஆதரவை வெளிட்டுள்ளார்..
“ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உள்ளது” என்று வால்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவித்திருந்தால் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக, அவர்கள் போரைத் தேர்ந்தெடுத்தனர்,” என்று டிரம்ப்பின் உயர்மட்ட உதவியாளர் மேலும் கூறியுள்ளார்.

