News

பிரிந்திருந்த கருணா மற்றும் பிள்ளையான் மீண்டும் இணைந்தனர்… கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பை உருவாக்கி இருவரும் றிவோரா ஹோட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை (22) மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.



பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கி அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15ஆம் திகதி சைச்சாத்திடப்பட்டது.



இதனையடுத்து நடக்க இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர் .



இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.



(கனகராசா சரவணன்)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button