News

ரனில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைக்கும் வேலைத்திட்டத்தை களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் !

ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்தை களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளதாக பொதுஜன பெரமுன களுத்துரை மாவட்ட தலைவர் ரோஹித அபேகுனவர்தன குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் இன்று ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்ப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்தை களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம்.இந்த மாவட்டத்தை வெற்றி பெற செய்து காட்டுவோம். கட்சிக்கு எதிராக செல்வது கடினமான விடயம் உங்கள் கோரிக்கையை ஏற்று அந்த முடிவை நான் எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல இம்முறை ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு எனது அம்மா சொன்னார் 2015 இல் மஹிந்த ராஜபக்‌ஷவை விட்டு செல்ல வேண்டாம் என கூறிய அதே அம்மா தான் இம்முறை ரனிலோடு நிற்குமாறு கூறுகிறார்.

Recent Articles

Back to top button