News
4 மாவட்டங்களுக்கு மொட்டு புதிய அமைப்பாளர்களை நியமித்தது !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 மாவட்டங்களில் அமைப்பாளர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கம்பஹா மாவட்ட அமைப்பாளராக இருந்த திரு.பிரசன்ன ரணதுங்கவிற்கு பதிலாக இந்திக அனுருத்த, அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக இருந்த திரு.எஸ்.எம்.சந்திரசேனவுக்கு பதிலாக திரு.நாமல் ராஜபக்ஷ காலி மாவட்ட அமைப்பாளராக இருந்த அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு பதிலாக திரு.மோகன் பிரியதர்ஷன டி சில்வா நியமிக்கப்பட்டனர்.
மேலும் திரு. காஞ்சன விஜேசேகரவுக்கு பதிலாக மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நிபுன ரனவக நியமிக்கப்பட்டார்.