News

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா என்ற வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்தவர் கைதான சம்பவம் பதிவு

கோழி முட்டையில் இருந்து வந்ததா? முட்டை கோழியில் இருந்து வந்ததா? என்ற வாக்குவாதத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ள சம்பவம் இந்தோனேசியாவில் பதிவாகி உள்ளது.



புலவேசி மாகாணத்தில் டிஆர் என்பவர் தனது நண்பர் கதிர் மார்க்கஸ் என்பவரை மது அருந்த அழைத்து சென்றபோது இருவரும் ஒன்றாக மது அருந்த ஆரம்பித்து நேரம் ஆக, ஆக இருவரும் தலைக்கேறிய போதையில் இஷ்டம் போல பல்வேறு விடயங்களை பேச ஆரம்பித்துள்ளனர்.



ஏதேதோ பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை… முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்று சந்தேகம் இருவருக்கும் எழுந்து இருக்கிறது.



பதில் கூறுமாறு கதிர் மார்க்கசை அவரது நண்பர் டிஆர் வற்புறுத்த என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த விஷயத்தை தவிர்த்து விட்டு வீட்டுக்கும் கிளம்பிச் சென்றுள்ளார்.



ஆனால் நன்றக குடித்து இருந்ததால் முழு போதையில் இருந்த டிஆர், பதில் சொல்லாமல் சென்ற கதிர் மார்க்கஸ் மீது கோபம் கொண்டு உடனே தமது பைக்கில் துரத்திச் சென்று வழியில் மடக்கி, கத்தியால் ஆத்திரம் தீர குத்தி கொலை செய்துள்ளார்.



தகவலறிந்த உள்ளூர் பொலிஸார் சடலத்தை கைப்பற்றி கொலைக்கு அவர் பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்து டிஆரை கைதுசெய்துள்ளனர்.



அவர் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button