News
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மற்றுமொரு ஹமாஸ் தலைவரும் அவரது மனைவியும் பலி !

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் சலா அல்-பர்தாவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உறுதி செய்துள்ளது.
வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் அலுவலக உறுப்பினர் பர்தாவீல் மற்றும் அவரது மனைவி இருவரும் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

