News
கணவன் அடித்ததால் மனமுடைந்த மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் பதிவு

யாழ்ப்பாணத்தில் கணவன் தாக்கியதால் மன விரக்தியடைந்த மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய 4 மாதக் குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவிக்கும் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது கணவன் தனது மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் மன விரக்தியடைந்த மனைவி உயிரை மாய்த்துக்கொண்டார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

