News
திம்புலாகலைக்கு வரும் வேற்றுகிரகவாசிகளை பிரசித்தப்படுத்தி சுற்றுலாத்துறை மேம்படுத்த முடியும் ; பிரதியமைச்சர் டி பி சரத்

இலங்கையில் வேற்று கிரகவாசிகள் இறங்கும் இடம் என திம்புலாகல மதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள திஹியாகல மலைப்பிரதேசம் பிரசித்திபெற்றுள்ளதாக பிரதியமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் இறங்கும் இடம் என்று உலகத்திற்க்கு சென்றுள்ள குறித்த செய்தி நாம் விடயத்தை பிரசித்தப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் இந்த இடம் உலக அளவில் சிறப்பான சுற்றுலா மையமாக மாற வாய்ப்புள்ளதாகவும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பின்னால் உள்ள விஞ்ஞானபூர்வ பின்னனியை நாம் தேடிப்பார்த்து அதற்கு வலுச்சேர்க்கவேண்டும். அதற்கு விருப்பமான மக்கள் உள்ளனர். அதனை நாம் பிரயோசனப்படுத்திக்கொள்ள முடியும் என கூறினார்.
தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



