வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நிம்மதியை சீர் குழைத்துவிடக்கூடாது !
குவைத்தில் ஜே வி பிக்கு ஆதரவாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 26 பேர் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் சட்டங்களுக்கு இணங்க கவனமாக இருக்க வேண்டும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், வெளி நாட்டில் அரசியல் செய்வதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் எனத் தெரியவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் மிகவும் நிம்மதியாக வாழ்வதாகவும், இந்நாட்டு அரசியலை அந்த நாட்டிற்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையும் சீர்குலைந்து போவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கேகாலை பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
சிக்கலில் உள்ள எந்தவொரு இலங்கையர்களையும் விடுவிக்க தூதரகங்கள் உறுதிபூண்டுள்ளன.வெளிநாட்டில் இதுபோன்ற செயல்கள் நடந்தால், அந்நாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
மேலும், இங்குள்ள அரசியலில் எந்தளவுக்கு அங்கு பயன் உள்ளது என்று தெரியவில்லை.அந்த நாடுகளில் எமது இலங்கையர்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.இங்குள்ள அரசியலை அந்த நாடுகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களின் வாழ்க்கையே சீர்குலைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.