News

பலஸ்தீன மக்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும், கொலைகளை நிறுத்துமாறும் கொழும்பில் இஸ்ரேலுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம்

(அஷ்ரப் ஏ சமத்)

பலஸ்தீன் மக்களுக்கு அவர்கள் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறு அந் நாட்டில் நடைபெறும் கொலைகள் நிறுத்துமாறும் இஸ்ரேலுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டமொன்று நோன்பு மாதத்தின் குத்ஸ் தினத்தில் நேற்று 28 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கோஷமிட்டார். அவர் கருத்து தெரிவிக்கையில் இஸ்ரேல் பலஸ்தீன் மக்களுக்கு குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்று பட்டு ஜ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும்.  இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார் அத்துடன் வணக்கத்துக்குரிய அருட் சகோதரர் பெரேராவும் கருத்துத் தெரிவித்தார் .

பலஸ்தீன் சுதந்திர இயக்கம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button