VIDEO > போக்குவரத்து போலீசார் முன்னாள் இருக்கிறார்கள் என எதிரில் வரும் வாகனங்களுக்கு ஹெட் லைட் அடித்து எச்சரிக்கை வழங்குவது தப்பில்லை

போக்குவரத்து போலீசார் பாதையில் இருப்பதால் வாகன சாரதிகள் கவனமான முறையில் வாகனங்களை செலுத்துவார்கள் – இதேவேளை எதிரில் வரும் வாகனங்களுக்கு ஹெட் லைட் அடித்து போக்குவரத்து போலீசார் முன்னாள் இருக்கிறார்கள் என்று அறிவுறுத்தும் போதும் குறிப்பிட்ட வாகன சாரதி வாகனத்தின் வேகத்தையும் குறைத்து சரியான முறையில் அதனை செலுத்துவார்- இதனால் இது தவறில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மணதுங்க தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் முன்னாள் இருக்கிறார்கள் என ஹெட் லைட் அடித்து அறிவுறுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்க எடுப்பதில்லை.
இது தொடர்பில் நாம் போக்குவரத்து போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.
அதேபோல் நீங்கள் வீதியில் வாகனம் ஒன்றை செலுத்தும் போது உங்களுக்கு எதிர் திசையில் வருபவர் வேகமாக அல்லது கவனயீனமாக வானத்தை செலுத்திக் கொண்டு வருவதைக் கண்டால் அவருக்கு ஹெட் லைட் அடித்து முன்னாள் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்று ஒரு எச்சரிக்கையை வழங்குவதும் தப்பில்லை.
பொலிஸ் திணைக்களம், அரசாங்கம் என்ற வகையில் மக்களிடம் தண்டப்பணம் அறவிட்டு இலாபம் அடைவது எமது நோக்கமல்ல.
தண்டப்பணத்தைப் பெற்று இலாபம் பெறும் அவசியம் எனக்கு இல்லை .
கவனயீனமாக வாகனம் செலுத்துவார்கள் எதிர்திசையில் வந்தால் நீங்கள் ஹெட் லைட் அடித்து அவரை எச்சரிக்கை செய்வது, விபத்துக்களை தடுப்பது வரவேற்கத்தக்கது. VIDEO https://vt.tiktok.com/ZSr2d62Ek/

