கத்தாரிடமிருந்து பணம் பெற்ற நெத்தன்யாஹுவீன் நெருங்கிய சகாக்கள் -இஸ்ரேலில் வெடித்தது புதிய சர்ச்சை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததை இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது.
கத்தார் குறித்து இஸ்ரேலில் சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாக பெஞ்சமின் நெட்டன்யாகுவின் இரண்டு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கத்தார் ஹமாசிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்ற நாடு என இஸ்ரேலில் பலர் கருதுவதாலும், இஸ்ரேலிற்கும் கத்தாருக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதாலும்,இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் இஸ்ரேலின் அரசியலின் உயர்பீடம் வரை தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதும் இஸ்ரேலில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரதான நாடான கத்தார் தான் ஹமாசிற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளது.
இதுவரை இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய பொலிஸார் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை சந்தேகநபராக சேர்க்கவில்லை.
இந்த குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என தெரிவித்துள்ள அவர் தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி இதுவென தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் எதிர்கொண்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீண்டகாலமாக ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
சமீபத்தை சர்ச்சையை இஸ்ரேலிய ஊடகங்கள் கத்தார்கேட் என குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேலிய பிரதமரின் இரண்டு நெருங்கிய சகாக்கள்hன ஜோனட்டன் உரிச்,முன்னாள் பேச்சாளர் எலிபெல்ட்ஸ்டெய்ன் இருவரும் இஸ்ரேலில் கத்தார் குறித்து நல்லபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக,பொதுமக்கள் தொடர்பாடல் நிறுவனமொன்றை நடத்துவதற்காக பணம் பெற்றுள்ளனர்.
கத்தார் ஹமாசின் சார்பில் யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரு சூழ்நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா சேர்ந்த ஒருவர் மூலமே இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த அந்த நபரும், ஜோனட்டன் உரிச் என்பவரும்,கத்தார் குறித்து சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவும் எகிப்து குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவும் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தினார்கள் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது.

