ஸ்டிக்கர் ஒட்டிய வாலிபருக்கு எந்தவொரு அமைப்பினருடனும் எவ்வித தொடர்பும் இல்லை !

99.9 % வீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புபவர்கள் எனவும் வன்முறை மனோநிலைக்கு தள்ளப்பட்டுள்ள மிகச்சிறிய குழு செயற்பாட்டினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஆபத்து எனவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
அக்குரனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்
பலஸ்தீக்கு எதிரான யுத்தம் அங்கு பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிலேச்ச தாக்குதல் தொடர்பில் உலக அளவில் மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களும் பலஸ்தீன் விடயத்தில் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர். உங்களுக்கு அது தொடர்பில் எதிர்ப்பு வெளியிட தங்களது நிலைப்பாட்டை கூற பூரன உரிமையுள்ளது.ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது.அந்த வரம்பை மீறி நாம் செல்லத் தேவையில்லை.nஅங்குள்ள மோதலல் இங்குள்ள மோதலாக கூடாது .அங்குள்ள மோதலை அங்கேயே வரையறுக்க வேண்டும்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாலிபர் ரகசியமாக ஒழிந்து வந்து ஸ்டிக்கர் ஒன்றை சுப்பர்மார்க்கட்டில் ஓட்டியுள்ளார்.குறித்த செயற்பாடு கொஞ்சம் எதிர்ப்பை வெளிப்படுத்துவதையும் தாண்டிய ஒரு செயற்பாடாக விளங்குகிறது.
குறித்த வாலிபரை நாம் கைது செய்து விசாரணை செய்தோம். குறித்த வாலிபரின் சமூகவலை கணக்குகள் தொடர்பில் ஆராய்ந்தோம். குறித்த வாலிபருக்கு எந்தவொரு அமைப்பினருடனும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது விசாரணைகளில் தெளிவானது. யூ டியுப் மற்றும் சமூகவலைளில் அங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து அவர் சுய உந்துதலுக்கு ஆளாகியுள்ளார்.
ஆகவே வரம்புகளை மீறி அவர் எதோவெரு இடத்திற்க்கு தள்ளப்படுவார் என்ற சந்தேகம் உள்ளது.குறித்த வாலிபரே அவர் சுய உந்துதலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார்.பெற்றோருக்கும் வாலிபரை முன்னிலைப்படுத்திய போது அவர்களும் தங்கள் பிள்ளையை அழிவிலிருந்து காப்பாற்றியமைக்காக நன்றி தெரிவித்தனர்.
முஸ்லிம் வாலிபரா ? இஸ்ரேல் எதிர்ப்பா என்பது அல்ல நாட்டில் ஏதோ ஒரு வன்முறை சம்பவம் ஏற்பட்டால் அது நாட்டின் பொருளாதரத்திற்கும் எமது இருப்பிற்கும் பாதுகாப்பு தொடர்பிலும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்திவிடும்.ஆகவே அரசாங்கம் எப்போதும் சந்தேகத்தின் வாய்ப்பை தமது பக்கம் எடுத்துள்ளது. அதுவல்லாமல் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கை அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அரும்கம்பை பிரதேசத்திலும் சர்வதேசத்தில் இருந்து தாக்குதல் திட்டம் தீட்டியவர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்ததால் தான் அந்த திட்டத்தை முறியடிக்க முடிந்தது.அந்த அசம்பாவிதம் நடந்திருந்தால் அது ஈஸ்டர் தாக்குதல் 2 ஆக மாறியிருக்கும். மீண்டும் முஸ்லிம்க மீது பழி விழுந்திருக்கும்.
99.9 % வீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புபவர்கள் எனவும்வன்முறை மனோநிலைக்கு தள்ளப்பட்டுள்ள மிகச்சிறிய குழு செயற்பாட்டினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஆபத்து.முஸ்லிம் சமூகத்திற்குள் வளர்ந்து வரும் மற்றுமொரு அடிப்படைவாத குழு தொடர்பிலும் எமது முஸ்லிம் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளோம் என அவர் கூறினார்.

