VIDEO : பாலஸ்தீன மக்களுக்காக விமானங்கள் மூலம் நேரடியாக உணவுப் பொருட்களை இறக்கி மனிதாபிமான சேவையைச் செய்த மன்னர் ஸல்மான் அவர்களுக்கு நன்றிகள்.

பாலஸ்தீன மக்களுக்காக விமானங்கள் மூலம் நேரடியாக உணவுப் பொருட்களை இறக்கி உலகின் மிக அற்புதமான மனிதாபிமான சேவையைச் செய்த மன்னர் ஸல்மான் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும்…
அகில இலங்கை YMMA முன்னாள் தலைவர் Shaheed M. Rizmy
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு தவிக்கும் பலஸ்தீன மக்களுக்காக உணவுப் பொருட்களை விமானங்கள் மூலம் நேரடியாக காஸாவுக்குள்ளேயே இறக்கி அம்மக்களுக்கு நிவாரணம் போய் சேர உதவிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், மற்றும் கிங் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின் பொது மேற் பார்வையாளர் கலாநிதி அப்துல்லாஹ் அல் ரபீஆ ஆகியோருக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜோர்தான் நாட்டு ஒத்துழைப்புடன் பாலஸ்தீனிய மக்களுக்கு பாரிய அளவிலான மனிதாபிமான உதவிகளை விமானங்கள் மூலம் இறக்கி உதவியது சவுதி அரேபியா. இது சவுதி அரேபியா செய்த மிக அற்புதமானதொரு செயலாகும். பாலஸ்தீன மக்களுக்காக விமானங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை நேரடியாகவே இறக்கி சவுதி அரேபியா உதவி செய்துள்ளது.
மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், ஆகியோரின் தலைமையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் முதலில் உதவி கரம் நீட்டுவது சவுதி அரேபியா ஆகும்.
உலகில் எங்கெல்லாம் மனித அவலம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இன மதம் பொருட்படுத்தாமல் சவுதி அரேபியாவின் உதவிக்கரம் முதலில் அவர்களைச் சென்றடைகின்றன. இது அன்று தொட்டு இன்று வரை சவுதி அரேபிய ஆட்சியாளர்களும் மற்றும் சவுதி மக்களாலும் பழக்கப்பட்ட மிகச் சிறந்த செயலாகும்.
மனிதநேயத்திற்கான கதவை உலகில் யாராவது மூடினால், அம்மனிதநேயத்திற்காக கதவைத் திறக்கும் முதல் நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது. இது உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பெருமையையும் மரியாதையையும் சேர்க்கும் விடயமாகும். ஏனெனில் சர்வவல்லமையுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளுக்குப் பிறகு இஸ்லாமிய தேசங்களினதும் உலக முஸ்லிம்களினதும் முன்மாதியாக சவுதி அரேபியா உள்ளது. சவுதி அரேபியா இம்மாபெரும் பணிகளை உலக முஸ்லிம்கள் சார்பாக செய்து கொண்டிருக்கிறது. இது சவுதி அரேபியாவிற்கும் மரியாதைக்குரிய ஆல் சஊத் குடும்பத்திற்கும் விசித்திரமானது அல்ல. இது எப்போதும் முழக்கங்கள் இல்லாமல், ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், பலஸ்தீன நாடுகளின் பிரச்சினையைகளை வணிகமயமாக்காமல், அப்பட்டமான ஊடக பாசாங்குத்தனம் இல்லாமல், நடிப்புகள் இல்லாமல், எந்த நாடுகளுக்கும் துரோகம் செய்யாமல், சவுதி அரேபியா செய்யும் மிகப் பெரிய மனிதாபிமானங்கங்களாகும்.
சவுதி அரேபியா 75 ஆண்டுகளாக பாலஸ்தீனிய மக்களுக்காக அல்லாஹ்விடமிருந்து நன்மையை நாடி மாத்திரம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சக்திகளையும் வளங்களையும் கொண்டு பலஸ்தீனுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது.
சவுதி அரேபியா பல விமானங்கள் மூலம் பல டன்கள் உதவிகளை பலஸ்தீனுக்கு அனுப்பியுள்ளது. இதுவரை 54 சரக்கு விமானங்கள் பலஸ்தீனுக்குச் சென்றடைந்துள்ளன. மேலும் கடல் மார்க்கமாகவும் நிறைய மனிதாபிமான உதவிகளைச் செய்துள்ளது. மிகப் பெரிய 8 கப்பல்கள் மூலமும் மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. 30 உயர்தர ஆம்புலன்ஸ்கள் சவுதி அரேபியா மூலம் சென்றடைந்துள்ளன. ரஃபா எல்லை வழியாக இதுவரை 500 க்கும் மேற்பட்ட கெண்டைனர்களில் பலஸ்தீன் மக்களுக்காக பாரிய உதவிகளைக் கொண்டு போய்ச் சேர்துள்ளது சவுதி அரேபியா.
மேலும் பாலஸ்தீனிய மக்களுக்கு சவுதி அரேபியாவால் வழங்கப்பட்ட பல்வேறு வகையான உதவிகளின் அளவு 6,546 டன்களை எட்டியுள்ளது. இதன் பெறுமதி 80 மில்லியன் மற்றும் 750 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ளதாகும்.
பாலஸ்தீனிய மக்களை விடுவிக்க பல சர்வதேச அமைப்புகளுடன் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது சவுதி அரேபியா. மேலும் பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடு என்பதை சவுதி அரேபியா முமையாக ஏற்றுள்ளதோடு உலகின் பல நாடுகளையும் ஐக்கிய நாடு சபையில் ஏற்றுக் கொள்ள வைத்தது. இது சவுதி அரேபியா மூலம் பலஸ்தீனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
பாலஸ்தீன மக்களுக்கு விமானம் மூலம் உதவ சவுதி அரேபியாவுடன் இணைந்து ஒத்திழைத்த ஜோர்டானின் அரசுக்கும் மற்றும் ஜோர்டானிய விமானப்படைக்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://www.facebook.com/MadawalaNewsWebsite/videos/888206726445126/

