News

குரங்குகள் மற்றும் மர அணில்கள் ஒரு நாளைக்கு எட்டு லட்சம் தேங்காய்களை உண்ணுகின்றன..

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டு தற்போது நாம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம்..

கடந்த வருடம் தேங்காய் விளைச்சல் 400 மில்லியனால் குறைவடைந்தாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

குரங்கு மற்றும் மர அணில்கள் வருடத்திற்கு 300 மில்லியன் தேங்காய்களை உண்ணுகின்றன.அதாவது ஒரு நாளைக்கு எட்டு லட்சம் தேங்காய்கள்.

எமது தேங்காய் உற்பத்தி வருடத்திற்கு 3000 மில்லியன். அதில் 1500 மில்லியன் தேங்காய்கள் ஏற்றுமதியாகின்றன. எஞ்சியவை நாட்டுமக்களின் நுகர்வுக்கு பயன்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு 200 மில்லியன் தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Recent Articles

Back to top button