சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் விஷேட மாநாடு.
சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர்களுக்கான விஷேட மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற உள்ளது.
இவ்விஷேட மாநாட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கட்சியின் நிலைப்பாட்டினை, செயற்குழு அங்கத்தவர்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க, தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.
மேலும், சமூக நீதிக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மக்கள் மயப்படுத்துவது, கட்சியினை தேசிய ரீதியில் விஸ்தரிப்பது, நாடளாவிய ரீதியில் மேலும் பல புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, கட்சியை பலப்படுத்துவது மற்றும் கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்கிலேயே இம்மாநாடு கூட்டப்படுகிறது.
‘திடமாய் முன்னோக்கி’ எனும் மகுடத்தின் கீழ் நடைபெறும் இம்மாநாடு கட்சியின் அடுத்த கட்ட நகர்வுக்கான முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.