News

பௌத்த மத பக்தர்களின் அவசர தேவைகளுக்காக கண்டி நகரத்தை அண்மித்த 5 பள்ளிவாயல்கள் 24 மணி நேரமும் Open ..

பௌத்த பக்தரின் அவசர தேவைகளுக்காக கண்டி நகரத்தை அண்மித்த 5 பள்ளிவாயல்களை 24 மணி நேரமும் திறந்து கொடுத்துள்ளாத கண்டி மஸ்ஜித் சம்மேளனத்தலைவர் கே ஆர் ஏ சித்தீக் மடவளை நியூசுக்கு குறிப்பிட்டார்.

இலட்சக்கணக்காக பௌத்தர்கள் ஶ்ரீ தலதா தரிசனத்திற்கு வந்துள்ள நிலையில் அவர்களின் அவசர தேவைக்களுக்காக இந்த வசதிகளை செய்து கொடுத்ததாக அவர் கூறினார்.

கண்டி மாவட்ட ஜம்மியா , கண்டி மஸ்ஜித் சம்மேளனம் , கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.

நேற்றை மாலை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கண்டி பெரிய பள்ளிவாயல் (லைன் பள்ளி) மற்றும் கட்டுகஸ்தோட்டை ஜூம்மா பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்கள் பக்தர்கள் தங்குவதற்காக திறந்து கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Recent Articles

Back to top button