News
இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் ஆபாச வசனங்கள் காணப்படும் அதிர்ச்சி சம்பவம் பதிவு

இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் ஆபாசமான மற்றும் பொருத்தமற்ற மொழி காணப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.
இணையத்தில் பரவி வரும் ஒரு screen shot படத்தின் படி, அமைச்சின் செயலாளர் தொடர்பான தகவல்களை காண்பிக்க வேண்டிய பகுதியில் ஆபாசமான மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கம் தேடல் முடிவில் பட்டியலிடப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய மொழியின் இருப்பு, இணையதளம் வெளிப்புற தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது திரிபு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், இணைய பாதுகாப்பு நிபுணர்கள் இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து, பிழைகளை திருத்த வேண்டிய அவசர தேவையை வலியுறுத்துகின்றனர்.

