News
மாற்றம் கொண்டு வருவதாக கூறிய புதிய அரசாங்கத்தால் இதுவரை மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் முன்வைத்த கருத்துகளுக்கு முரணான கருத்துகளையே தற்போதைய அரசாங்கம் முன்வைப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்தை மக்கள் கொண்டு வந்துள்ள போதிலும் இதுவரையான காலப்பகுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

