இஸ்ரேலில் கடுமையான வெப்பம், காற்று மற்றும் காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்தது

இஸ்ரேலில் ஜெருசலேம் மற்றும் மத்திய பகுதிகளில் காட்டுத்தீ பரவி வரும் அதேவேளை, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை நிலைமைகள் தொடரும் எனவும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வலுவான காற்று, மிக அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை அந்த நாட்டில் காட்டுத்தீயின் அபாயத்தையும் பரவலையும் தீவிரப்படுத்தி வருகின்றன.
பல பகுதிகளில் வெப்பநிலை 36° முதல் 38° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது, சில பகுதிகளில் 39° வரை பதிவாகியுள்ளது. ஷ்ஃபேலா பகுதி, தெற்கு கடற்கரை சமவெளி மற்றும் மேற்கு முதல் வடமேற்கு நெகேவ் பகுதிகளில் மிக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
பல பகுதிகளில் ஈரப்பதம் 10%க்கும் கீழே குறைந்துள்ளது, குறிப்பாக வலுவான காற்று வீசும் பகுதிகளில் இது காட்டுத்தீயை மேலும் தீவிரமாக்குகிறது.
தீயணைப்பு வீரர்கள், வானிலை ஆய்வு மையத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்து, பல இடங்களில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என the Jerusalem post செய்தி வெளியிட்டுள்ளது.

