டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9th May) வெளியீடு

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ என்ற நூல் வெளியீடு எதிர்வரும் 09.05.2025 வெள்ளிக் கிழமையன்று பி.ப. 4.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள ‘ஜெஸ்மின்’ அரங்கில் நடைபெறவுள்ளது.
அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுனர் ஹனீப் யூஸூப் அவர்கள் கலந்து கொள்வதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல்மானாண ஆளுனர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொள்வார்கள்.
நூல் பற்றிய கருத்துரையை ஆசிரியையும் இலங்கைத் திறந்த பல்கலைக் கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி சுமையா ஷரிப்தீன் வழங்க ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் ‘நூல் கடந்த நோக்கு’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
பதிலுரைகளை டாக்டர் ஷாபி சிகாப்தீன், நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். வரவேற்புரையை செல்வி ஸெய்னப் ஷாபி நிகழ்த்துவார். திருமதி ஆஷிகா பர்ஸான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
தகவல் -இம்றான் நெய்னார்


