News
நாமலின் வருகையால் ரனில் 4ம் இடத்திற்கு செல்வார் ; அஷேக் அபேசிங்க
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சி எடுத்துள்ள முடிவால் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க 4 வது இடத்திற்கு செல்வார் என குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஷோக் அபேசிங்க குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதால் ரனில் விக்ரமசிங்கவுக்கு பாரிய நெருக்கடி தோன்றியுள்ளது.அவர் இந்த தேர்தலில் 4 வது இடத்தை பிடிப்பார் என நான் எதிர்வு கூறுகிறேன் என குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஷோக் அபேசிங்க குறிப்பிட்டார்.