News
7ஆம் தேதி இந்தியா முழுவதும் போர் ஒத்திகை!

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
விமான தாக்குதல் நடைபெறும் போது ஒலிக்கும் அபாய ஒலி சைரனை ஒலிப்பது,முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தளங்களை பாதுகாப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போர்க்காலத்தின் போது எப்படி பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட போர்க்கால ஒத்திகைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

