News

இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கண்காணிப்புக் கப்பல்கள் இருப்பது கவலையளிக்கிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கண்காணிப்புக் கப்பல்கள் இருப்பது தொடர்பில் கவலையளிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் இந்திய விஜயத்தின் போது இந்திய செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின், குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் எம்.பி., பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் காட்டும் அக்கறையையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், இலங்கையின் கடல் அல்லது பிரதேசத்தில் துருப்புக்கள் இருப்பதை தாம் ஏற்கவில்லை என்றும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவை அங்கீகரித்து, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கை கடற்பரப்பில் சீன கண்காணிப்பு கப்பல் வருவது குறித்து சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டது. அதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவும் கவலை தெரிவித்தது,” என்று அவர் கூறினார்.

Recent Articles

Back to top button