தர்மச்சக்கரம் ஆடை விவகாரம் சகோதரி மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது.! அது கப்பலின் சுக்கான் தான் என கண்டறியப்பட்டது – ஹசலக OIC தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டஈட்டுத்தொகை செலுத்த உத்தரவு.

தர்மச் சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது.
– ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மச்சக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்,
மஹியங்கனை, ஹஸலகவை சேர்ந்த சகோதரி மஸாஹிமா அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.
உண்மையில் கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத்தான் அவர் அணிந்தார்.
இந்நிலையில் பின் நாட்களில் விடுதலையான சகோதரி மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது.
நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது.
அதற்கமைய, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் விதி 12(1), 13(1), 13(2) மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதி மன்றம் இன்று உறுதிப்படுத்தியதுடன்
அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வழக்கு செலவுகளை (Cost) அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகினர்.
நீதிக்காக போராடிய சகோதரி மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது.
நீதிக்காக வாதிட்ட சட்டத்தரணிகளுக்கும் இவ்வேளையில் நன்றிகள் உரித்தாகட்டும்.👍🤝
30 July 2025

