News

பாராளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து தேர்தலை வெற்றிபெறலாம் என நினைக்கும் ஜனாதிபதிக்கு பாடம் புகட்ட வேண்டும் ..

பாராளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து தேர்தலை வெற்றிபெறலாம் என நினைக்கும் ஜனாதிபதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

அன்று அஷ்ரப் அவர்கள் பிரேமதாச ரணசிங்கவை ஜனாதிபதியாக்க உறுதுணையாக இருந்ததாகவும் இன்று நாம் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க உறுதுணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எம். எஸ். தௌபீக் மட்டுமே கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுடன் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்திருந்த போதிலும், இன்றைய விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹரீஸ் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button