News

C.T. B (இலங்கை போக்குவரத்து சபை)யில் வேலை செய்த மடவளையை சேர்ந்தவர்களின் பட்டியல்…
[1958 – 2025 வரைக்கும்]

இலங்கையில் பொதுமக்கள் போக்குவரத்து சேவை தனியார் துறையில் இருந்து 1958 ஆம் ஆண்டு அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையாக (C. T. B) மாறியது.

1958 க்கு முன்னர் மடவளை ஊர் முதலாளிகளுக்கு சொந்தமாக இருந்த SLIVARLINE BUS COMPANY யில் ஊரார் சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் வேறு துறைகளிலும் வேலை செய்த நிலையில்,

போக்குவரத்து சேவை அரசுடமை ஆக்கப்பட்டதும் அப்போது வேலை செய்தவர்களும் தொடர்ந்தும் C. T. B யில் பணியாற்றினர். அதன் பின்னர் தொடர்ந்தும் ஊரார் C. T. B யில் தொழில் வாய்ப்பு பெற்றனர். அது ஒரு பொற்காலம் எனலாம்.

கவலை என்ன தெரியுமா? ஆரம்பத்தில் இவ்வளவு பேர் தொழில் செய்திருந்தாலும் கடந்த 25-30 வருடமாக விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரைத் தவிர யாரும் C. T. B யில் சேரவில்லை என்பதுதான்.

இந்த நிலை தற்செயலாக, ஊரில் ஊர் சம்பந்தமான கருத்துப்பறிமாற்றம் செய்யும் “மடவளை மண்ணின் குரல்” எனும் WhatsApp குழுமத்தில் பேசப்பட்டு தகவல் திரட்டப்பட்டது.

அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது 👇

✅ DEPOT MANAGER :-
1. அப்துல் லத்தீப் – ரிசாதின் தந்தை (MINA FARM HOUSE). டிப்போ மேனேஜராக பதவி உயர்வு பெற்று மாத்தளை டிப்போவில் பணியாற்றியுள்ளார்.

✅ ASSISTANT MANAGER :-
2. பாரூக் நானா – ரேந்த பொல புஹாரி மாஸ்டரின் தம்பி. பதவி உயர்வு பெற்று நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றியுள்ளார்.

✅ SUPPLY OFFICER :-
3. A.H.M. முர்சித் – கிரிக்கெட் ஜாஸிலின் மச்சான். (இப்போதும் வேலை செய்கிறார்).

✅ ACCOUNTANT :-
4. மர்ஹும் மாஹிர் – 6 ஆம் கட்டை இம்தியாஸின் சாச்சா. பாசில் பாரூக்கின் மாமா மர்ஹும் பாஹிர் அவர்களின் தம்பி.

✅ CHIEF CLERK/CHECKERS/TIME KEEPER/ACCOUNTANTS :- [இவர்களில் சிலர் CONDUCTOR/நடத்துனர்களாக பதவியை ஆரம்பித்து பின்னர் வேறு துறைகளுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.]
5. மர்ஹும் லேக மஹத்தியா – மர்ஹும் இம்ரான் நானாவின் வின் தந்தை. Australia ஹிஷாமின் பாட்டனார்.
6. மர்ஹும் முலாபர் தொர – 6 ஆம் கட்டை. மர்ஹும் எஹியான் சேரின் தந்தை. ஆசிப் டாக்டரின் பாட்டனார்.
7. மர்ஹும் வசீர் நானா லெப்பை வீடு. ஹைரா மாத்தளை கடை நுஸ்ரி மற்றும் ஜரீ ஆகியோரின் தந்தை.
8. மர்ஹும் ஜிfப்ரி MG – தம்பி தொரயின் தந்தை.
9. மர்ஹும் ஜிfப்ரி – சித்தீக் அதிபரின் சகோ.
10. மர்ஹும் சப்வான் நானா – பஸார்/சந்தி. பேங்க் ஜாசிலின் தாய் மாமா.
11. சாஜான் நானா – கல்வீடு. இப்போது இந்தியாவில் வசிக்கிறார். பேங்க் ஜாபிரின் சகோதரர்களில் ஒருவர்.
12. பளீல்தீன் நானா – கல்வீடு. பேங்க் ஜாபிரின் சகோதரர்களில் ஒருவர்.
13. கஸ்ஸாலி – இலண்டன் சகோ. உஸ்மானின் மச்சான்.
14. ராசிக் – அப்துல்லாஹ் ஹோட்டல் Zஸியாதின் மச்சான்.

✅ DRIVERS/ஓட்டுநர்கள் :-
15. மர்ஹும் முஸ்தபா – பிஹில்லதெனிய சனூன் நானாவின் தந்தை.
16. மர்ஹும் தாஹிர் -சாமியார் அப்பா. பங்களா கெதர.
17. மர்ஹும் அப்துல் மஜீத் – பஸீல் சேர் சுவிஸ் பாரூக் நானா மர்ஹும் பகுர்த்தீன் மௌலவி போன்றோரின் மாமனார்.
18. மர்ஹும் அப்துல் முனாப் – ஹிஜாசின் தந்தை. 6ஆம் கட்டை.
19. மர்ஹும் அப்துல் ஹசன் – சித்தீக் அதிபரின் தந்தை.
20. மர்ஹும் அப்துல் Kகfப்fபார் – நாபான, ஆட்டோ அக்பரின் தந்தை.
21. A.K. நிசார் – நாபான – ஆட்டோ அக்பரின் சகோ.
22. மர்ஹூம் A.K. நியுபர் – நாபான. ஆட்டோ அக்பரின் சகோ.
23. மர்ஹும் சனூன் – எஞ்ஜீனியர் இக்ராம், இலண்டன் காமில் போன்றோரின் தந்தை.
24. மர்ஹும் அப்துல் ஜப்பார் – கோங்காம தொடுவ.  ரிபாஸ், லண்டன் ரெஹான் ஆகியோரின் தந்தை. (எல்கடுவ பஸ்).
25. மர்ஹும் மீரா சாஹிபு – பாளீல்தீன் நானா, சாஜான் நானா, அலிகான், லண்டன் நவ்சாத், பௌசுல் லத்தீப், பேங்க் ஜாபிர் ஆகியோரின் தந்தை. மர்ஹும் சாபி சேரின் மமனார்.
26. மர்ஹும் சுபைர் – மர்சூக் மந்திரியின் தந்தை.
27. மர்ஹும் அன்சார் நானா – ஷியாம் சேர், லண்டன் பைஸல்/ராஜா போன்றோரின் தந்தை.
28. மர்ஹும் ஹாசீம் – மர்ஹும் ரஹ்மத்துல்லாஹ் சேரின் தந்தை. மர்ஹும் ரூஹுல் (இறைச்சி கடை) இன் மாமா.
29. மர்ஹும் நியாஸ் – நாபான. இலண்டன் ராஜப்தீனின் மாமா.
30. மர்ஹும் சேகு – நாபான. மசியாத்தா வீட்டு சரூகின் மச்சான்.
31. மர்ஹும் பாஹிர் – fபாயிக், ராசித் மௌலவி ஹம்சர், பைசர் (hyrex hardware) ஆகியோரது தந்தை. பாசில் பாரூக்கின்  மாமா.
32. பாரூக்  – சித்தீக் அதிபரின் சகோ.
33. நஜீம்தீன் – மர்சூக் மந்திரியின் மச்சான்.
34. மதீன் – மதீனா furniture
35. மர்ஹும் சித்தீக் – பேகம் டீச்சரின் கணவர்
36. சகரிய்யா – கல்வீடு. பொலீஸ் இக்பாலின் தந்தை.
37. மர்ஹும் சபீக் நானா – சந்தி பன்சலைக்கு பக்கத்தில்.
38. மர்ஹும் முஹ்சீன் நானா – கொடுவேகெதர. இஸ்மாயில் நானாவின் தந்தை.
39. மதீன் – வங்குவ கடை.
40. மர்ஹும் மர்ஜான் – பேங்க் முதஸ்ஸிரின் தந்தை.
41. மர்ஜான் – ஒசக்கமலை ஆட்டோ ரிபாத்தின் தந்தை.
42. மர்ஹும் மௌசூன் நானா – லெப்பை வீடு – கிரீன் பாசிலின் மாமனார்
43. மர்ஹும் சித்தீக் மாமா – முஹாரிஸ் மலேசியா, ரிஸ்வி லண்டன், பாசில், பார்ஹான் ஆகியோரது தந்தை.
44. புர்ஹான் – பியூன் மாத்தியா வீட்டு அன்சார் மாஸ்டரின் தம்பி.
45. மர்ஹும் மனாப் நானா – ரூஹுல் அமீனின் தந்தை.
46. நாப்பான ஹஜ்ஜி
47. மர்ஹும் ஹசன் – மர்ஹும் பூ வாப்பாவின் தந்தை.
48. மர்ஹும் இஸ்ஸதீன் – வங்குவ கடையை சேர்ந்தவர். சக்கூர் சேரின் மாமா. துல்ஹார், மசீம்தீன் ஆகியோரது தந்தை.
49. மர்ஹும் ஹசன் – நஜிமுதீனின் தந்தை. மர்சூக் மந்திரியின் மாமா.
50. மர்ஹும் மௌசூன் – ஸ்பெய்ன் நவ்சாத்தின் தந்தை. ஸ்பெஷல் பாயிஸ் நானாவின் மாமா.
51. சZக்கீன் நானா – ரேந்த பொல. ஜுனைதீன் மேசனின் மருமகன். Australia பைசல் அமர்தீனின் சாச்சா.
52. காலம் சென்ற மார்ட்டின் :- வங்குவ கடை. லண்டன் காமில் வீட்டுக்கு அருகில்.
53. குத்தூஸ் அப்பா – வங்குவ கடை. மதீன் நானாவின் தந்தை.
54. மர்ஹும் நூமான் நானா :- வங்குவ கடை சிப்லியின் மாமா.
55. மர்ஹும் வஹாப்தீன் – இவர் மர்ஹும் மம்ம யாசீன் நானாவின் தந்தை. வேல்டிங் அனஸ், உனைஸ் ஆகியோரின் பாட்டனார்.
56. மர்ஹும் ஜெய்ந்தீன் மாமா – வங்குவ கடை. ஐந்தீன் மற்றும் உசைன்தீனின் தந்தை.

✅ CONDUCTORS/நடத்துனர்கள் :-
57. ரியாஸ் – சதொச ஹசீம் நானாவின் சகோதரியின் மகன். (இப்போதும் வேலை செய்கிறார்).
58. முனீர் நானா – நியாஸ் சேரின் தம்பி.
59. மக்கீன் நானா – மடவளை சந்தி.
60. மசூத் நானா – Lanka pharmacy சகோ. நஸீரின் தந்தை
61. மர்ஹும் M. ஜெவாஹிர் – ஹாபிஸ் சேரின் தந்தை
62. மர்ஹும் S.M.A. அப்துல் கfபூர் ஹாபிஸ் சேரின் மாமா
63. உவைஸ் நானா – ரேந்தபொல – பவாசின் தந்தை.
64. மர்ஹும் Zசக்கரிய்யா – வெல்கம் ஜுவலர்ஸ்க்கு பக்கத்து வீடு. இத்தாலி ரிஸ்வியின் தந்தை.
65. மர்ஹும் உவைஸ் நானா – சுஹைப் இன் தந்தை. பீலிக்கர/ரவூப் ஹக்கீம் மாவத்த சனூன் நானாவின் மச்சான்.
66. மர்ஹும் சத்தார் காக்கா – சந்தி மரக்கறி இசாகின் சாச்சா.
67. அப்துல் ஹமீத் – நிசாமின் தந்தை. வசீர் சேரின் மாமனார்.
68. மர்ஹும் அமர்தீன் – AUSTRALIA பைசலின் தந்தை.
69. மர்ஹும் சலீம் – UK சரப்f, அஷ்ரப் அலி ஆகியோரின் தந்தை.
70. மர்ஹும் அப்துல் லத்தீப் – பங்களா கெதர மக்கீன் நானாவின் தந்தை.
71. மர்ஹும் சிராஜ் நானா – இலண்டன் ரஸ்லினின் தந்தை.
72. மர்ஹும் முஹீத்  – வங்குவ கடை – குலாம், கௌஸ் போன்றோரின் தந்தை.
73. மர்ஹும் அப்துல் லத்தீப் – அபால்தீன் நானாவின் கடைக்கு முன்னாள் நவ்சாத், முனீர், நிஜாம் போன்றோரின் தந்தை. மக்கீன் PC யின் தாய் மாமா.
74. மர்ஹும் அப்துல் ஹசன் – ஸ்பெய்ன் ரசீன் நானாவின் தந்தை – கொஸ்வத்த.
75. மர்ஹும் அப்துல் மன்னான் – துfப்ரியின் தந்தை.
76. மர்ஹும் மௌசூன் மாமா – மலைவீட்டு பாதை. அசீப் இன் தந்தை.
77. இஷாக் – சாவல் மாமா வீடு. அலாவுத்தீன் எஞ்சீனியரின் மாமனார்.
78. காலிதீன் – லெப்பை வீடு/மர்ஹும் ஹில்மியின் மாமனார்.
79. மர்ஹும் ஜப்பார் – நியாஸ் PC யின் தந்தை/அபூபக்கர் லெப்பையின் மாமனார்.
80. மர்ஹும் லியாவுத்தீன் – முனவ்வர் சேர், மஹ்பூப் சேர் ஆகியோரின் சகோதரர்.
81. மர்ஹும் ஹாதி – பயாஸின் தந்தை.
82. மர்ஹும் முஹம்மது ஹனிபா/மம்மனிபா – மர்ஹும் கமர்தீனின் தந்தை.
83. மர்ஹும் அப்துல் லத்தீப்f – ஸ்பெய்ன் ரில்வானின் தந்தை. மர்ஹும் ஹில்மி ஹசரத்தின் மாமா.
84. மர்ஹும் ஜுனைதீன் – ஸ்கூல் ரோட் Lazin இன் தந்தை.
85. மர்ஹும் கபூர் – தா நானா வீடு
86. மர்ஹும் ஹன்னான் காக்கா – ஆட்டோ மக்கீன், அஜ்வாத் போன்றோரின் தந்தை.
87. மர்ஹும் ஜெய்னுலாப்தீன் – பிஹில்லதெனிய. வஜீஹா Miss இன் தந்தை.
88. மர்ஹும் பாரூக் நானா – ஏழையின் கண்ணீர். சக்கூர் சேரின் மச்சான்.
89. மக்கீன் – முஹாரிஸ் மலேசியா,ரிஸ்வி லண்டன், பாசில், பார்ஹான் ஆகியோரது மச்சான்.
90. மர்ஹும் அப்துல் ரஹீம் – லொரி அமானுல்லாவின் தந்தை.
91. மர்ஹும் வஹாப்தீன் – மதீனா பாடசாலைக்கு பக்கத்தில். காமிலின் தந்தை.

✅ டிப்போ மெகானிக் :-
92. Gகனி மாமா – கல்வீட்டு முனாஜான் நானாவின் தந்தை.
93. சலீம் – கொஸ்வத்த ஹரீஸ் மாஸ்டரின் சகோதரன்

✅ PAINTING :-
94. மர்ஹும் ஹாதி – கொடுவேகெதர ராசிக் நானாவின் சகோதரர்.

✅ TINKERING WORK :-
95. மசூத் நானா – மடவளை சந்தி. நிஸ்தார் நானாவின் சகோதரர்.
96. M.M.முசாதிக் – குருநாகல் டிப்போ. திக்கின்ன பாரக் மாமாவின் மகன். பள்ளி ரோட் அபுல் கலாம் நானாவின் தம்பி. தேங்காய் ஹரீஸ் நானாவின் மச்சான்.

✅ CTB LERNERS TRAINING :-
97. எஹியான் நானா – 6 ஆம் கட்டை.

✅ CTB ல  பஸ் கழுவுதல் :-
98. முஹாஜிரீன் நானா – சோத்து வாப்பா  (கொஞ்ச நாள் செய்துள்ளார்).

✅ CTB  PETROL SHED :-
99. சித்தீக் நானா – கொடுவே கெதர
100. மனாப் நானா – கொடுவே கெதர. இஸ்மாயில், மர்ஹும் ரூலாஸ் போன்றோரின் தந்தை.
101. வதூத் லெப்பை – அப்துல்லா ஹோட்டல் இக்பாலின் தந்தை.
102. சமத் –  மடவளை சந்தியில் மர்ஹும் வசூர் நானாவின் தந்தை. பழக்கடை வசீமின் பாட்டனார். (இவர் ரெடியேடர் மெகானிக்).
103. ஆப்பிதீன் நானா – பள்ளி ரோட்டிலும் தெல்தெனிய ரோட்டிலும் ஸ்பெஷல் பாயிஸ் நானா வீட்டிலும் வாடகைக்கு இருந்தார். “Driver”
104. அப்பாஸ் நானா – இவர் மர்ஹூமா பாலுகா டீச்சரின் சகோதரர். Fawzuzaman, மர்ஹும் பஸ்லி, பர்சான் போன்றோரின் மாமா.
105. ஜாபிர் நானா –  பன்வில கரீம் மாஸ்டரின் மச்சான். மலைவீடு பாயிஸின் சாச்சா.
106. ஹசன் நானா – ஊராதெனிய பாயிஸ் இன் வாப்பா.  தெல்தெனிய ரோட்டில் இருந்தார்.
107. சம்சுதீன் நானா –  பியட் பஸ்களின் கியர் பொக்ஸ் மெகானிக்.
108. சுல்தான் – இவர் பேங்க் மலீகின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில் வசித்தார். மடவளை சந்தி.
109. லாஸிம் ஹாஜி – பிஹில்லதெனிய. IT இம்தியாஸ் சேரின் தந்தை. TIMBER MILL ரபீதீனின் மச்சான்.
110. அப்துல் ரஹீம் – மலை வீடு ஆரித் நானாவின் தந்தை. இவர் “Driver”
111. மர்ஹும் நியாஸ் – பேகரி நவ்சாதின் தந்தை.

✅ சரியான தகவல் இல்லாதவர்கள்  சிலர் உள்ளனர் 👇
112. லெப்பை வீட்டு பகுதியில் ஒருவர் -அன்சார் என்பவரின் சகோதரர்.
113. சிராஜ் நானா வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர்.
114. வங்குவ கடை முளாபர் நானாவின் உறவினர் ஒருவர்.
115. பங்களா கெதர முஹீத்
116. மேலே கூறப்பட்ட முஹீத் என்பவரின் சகோதரர்.

✅ ஹாபிஸ் சேர் (தான் அறிந்த வகையில்) தந்த CTB யில் வேலை செய்த மடவளை சிங்கள சகோதரர்களது பெயர்கள்👇
1. தர்மசேன – டேவிட் மகன். ஹாபிஸ் சேரின் பக்கத்து வீடு.
2. தெல்தெனிய ரோட்டில் உள்ள லயனல்,
3. லயனலின் வாப்பா,
4. பொல்கொல்ல 6 ஆம் கட்டை பொடி மஹத்தியா,
5. மாட்டின் – சிரஜ் நானா வீட்டுப்பக்கம் இருந்தவர்.
6. பிடியே கெதர பலிபான.
7. நாப்பான  சமரவிக்ரம டிப்போ மெனெஜராக இருந்தார்.
8. ரேந்த பொல  தமிழ் சகோதரர் ஒருவர்.
இப்படி பலர் இருந்துள்ளனர்.

மேலே கூறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அடையாளம் தெரிந்தவர்கள் 111 பேரும் யாரென்று சரியாக தெரியாதவர்கள் 5 பேரையும் சேர்த்து மொத்தம் 116 பேரும் மேலதிகமாக  மடவளைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் (நாம் அறிந்த வகையில்) சுமார் 8 பேரும் வேலை செய்துள்ளதை அறிய முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

பலர் கொஞ்ச காலம் C.T.B யில் வேலை செய்துவிட்டு இடையில் வேறு தொழில்களுக்கு அல்லது வெளிநாடு செல்வதற்கு விலகி சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் ஆரம்பத்தில் கண்டக்டராக சேர்ந்து பின்னாளில் வேறு பதவிகளுக்கு பதவி உயர்வு கிடைத்ததாகவும் தகவல் சொல்லப்பட்டது.

மேலேயுள்ள தகவல்கள் பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்டதன் அடிப்படையிலும் மண்ணின் குரல் குழுமத்தில் பலரும் பதிந்த தகவல்கள் அடிப்படையில்தான் தயாரித்துள்ளேன். இருப்பினும் இன்னும் சில தகவல்கள் கிடைக்காமல்/தெரியாமல்  விடுபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

மேலும் லிஸ்டில் உள்ளவர்களை இனங்காட்டுவதற்காக குடும்பத்தில் ஒருவரையோ அல்லது சிலரையோ குறிப்பிட்டுள்ளேன். யாருடைய பெயரையாவது அடையாளப்படுத்த தவறியிருப்பின் குறை நினைக்க வேண்டாம்.

இன்னொரு சுவாரஷ்யமான விஷயம் 👉 ஒரே குடும்பதைச் சேர்ந்த பலர் CTB யில் வேலை செய்திருப்பது தெரியவருகிறது.

குறிப்பு :- கூடுதலான தகவல்களை (கிட்டத்தட்ட 80 பேர்) தந்துதவிய ஹாபிஸ் சேர் உட்பட Fasil Farook, Bank ஜாபிர் நானா உட்பட “மடவளை மண்ணின் குரல் குழுமத்தில்” பெயர்களை குறிப்பிட்டவர்களுக்கும் எட்மின் ராபி சேருக்கு தனிப்பட்ட ரீதியில் சொன்னவர்களுக்கும் நன்றி – ஜசாக்கல்லாஹு கைரன்.

#CTBமடவளை1958-2025

✍️ தொகுப்பு,
Sulfi Sameen
15-05-2025

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker