News
மூன்று இளைஞர்கள் சென்ற வேன், பெண் ஒருவரால் நடு வீதியில் கவிழ்ந்த சம்பவம் பதிவானது.

வேகமாக பயணித்துக்கொண்டிருந்த வேன், நடுவீதியில் கரணமடித்து விபத்துக்கு உள்ளான சம்பவம், செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
வெல்லவாய நோக்கிச் சென்ற வேன், எல்லா-வெல்லாவய வீதியின் 02வது மைல்கல்லுக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
எல்லாவிலிருந்து வெல்லவாய நோக்கி வேன் பயணித்துக்கொண்டிருந்த போது, பெண்ணொருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென வீதியின் குறுக்கே சென்றது, அதே நேரத்தில், வேன் வேகத்தைக் குறைக்க பிரேக் போட்டு கவிழ்ந்தது.
விபத்து நடந்த நேரத்தில் வேனில் மூன்று இளைஞர்கள் இருந்தனர், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. வேன் மட்டும் சேதமடைந்துள்ளது என தெரிவித்த வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது

