மதுபான விற்பனை வீழ்ச்சி !விலைகளை குறைக்க கலால் திணைகளம் கடும் முயற்சியில் இறங்கியது..
எதிர்காலத்தில் மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
750 மில்லிலீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1000 ரூபாவினாலும் 175 மில்லிலீட்டர் போத்தலின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அண்மையில் கலால் ஆணையாளருக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மதுவுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின் விலை குறைந்துள்ளதாக கலால் ஆணையர் தெரிவித்துள்ளார்.எனவே மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கு மது பாட்டில்களின் விலையில் 80% மற்றும் 90% VAT மற்றும் பிற வரிகளை உள்ளடக்கியதாக மது நிறுவனங்கள் சுட்டிக்கட்டியுள்ளன.
கடந்த ஜூலை 1, 2023 அன்று, வெளியான வர்த்தமானி அறிவித்தல் மதுபானம் மற்றும் மதுபானங்களின் விலையை அதிகரித்தது. விசேட மதுபான போத்தல் ஒன்றின் விலை 1000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.