News

நோயாளியை அம்பியூலன்ஸில் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையில், உள்ளிருந்த தாதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இராணுவ அதிகாரி..

விபத்தொன்றின் பின் காணமடைந்த நோயாளியை 1990 அம்பியூலன்ஸில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, நோயாளியுடன் வந்த இராணுவ அதிகாரி வண்டியில் இருந்த தாதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அம்பியூலன்ஸ் வண்டியிலுள்ள பொலிஸ் தபால் உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலும் இராணுவ சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரண -கந்தானை பல்லபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சந்தேகநபரின் சகோதரர் காயமடைந்துள்ளார்.

அவரை 1990 அம்பியூலன்ஸ் வணடியில் அழைத்துச் செல்லும் போது, சந்தேகநபரான இராணுவ சார்ஜென்ட்டும் நோயாளியுடன் அம்பியூலன்ஸில் ஏறினார்.

இதன்போது, அம்பியூலன்ஸில் இருந்த செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நடந்த போது பொலிஸ் குழுவொன்று அங்கு சென்ற நிலையில், அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது, சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரும் காயமடைந்த அவரது சகோதரரும் அதிகளவில் குடி வெறியில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சந்தேக நபர் பனாகொட இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்தவர். சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button